மலைநாடு

மடூல்சீமை தமிழ் மகா வித்தியாலயத்தின் கோரிக்கையை நிறைவேற்றிய அரவிந்தகுமார் எம்.பி

மடூல்சீமை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது பாடாசலைக்கு அருகில் பஸ் தரிப்பிடமொன்று இல்லாமல் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

இவ்விடயம் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து தனது நிதியொதுக்கீட்டின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட பஸ் தரிப்பிடத்தை அரவிந்தகுமார் எம்.பியால் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் லுணுகலை பிரதேச சபை உறுப்பினர் எம். கணேசமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டார்.

Comment here