Top Storyமலைநாடு

திலகர் எம்.பியை புகழ்ந்த இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்!!

மலையக மக்கள் மீது திலகராஜ் அதிக கரிசனையும், அக்கரையும் கொண்டவர் என்று பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அமைச்சின் நிதியொதுக்கீட்டில் களுத்துறை மாவட்ட ப்ரடெஸ்டர் தோட்டத்தில் அமைக்கப்பட்ட 18 வீடுகளை கொண்ட கிராமம் கையளிக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

திலகராஜுடன் இணைந்து செயற்படுவது பெருமையாக உள்ளது. மலையக மக்கள் மீது அவர் அதிக கரிசனை கொண்டுள்ள நபராகவும் உள்ளார்.

அரசியலை தாண்டி கல்வியிலும் சமூக அக்கரையிலும் நற்குணம் உடையவர்.’கட்டுப்பொல’ எனும் பெயரை முள்ளுத்தேங்காய் என அறியவைத்தவர். தொடர்ந்து வரும் காலங்களில் மக்களுக்கு பல சேவைகளை ஒன்று சேர்ந்து செய்வோம் என்றார்.

தகவல்:-நீலமேகம் பிரசாந்த்

Comment here