உள்நாடு

தமிழகத்தில் கொடிகட்டி பறக்கும் ஈழத்துக்குயில் சின்மயி!!

இலங்கையில் சாவகச்சேரி மட்டுவில் பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட சின்மயி உள்நாட்டு யுத்தம் காரணமாக சிறுவயதிலேயே கனடாவின் டொரோண்டோ நகரத்தை கொண்டார்.

சின்மயி சிறுவயது முதலே தாய்மொழி தமிழ் மீதும் இசைக்கலை மீதும் ஆர்வமுடையவராக இருந்துவருகிறார். இவரை முறைப்படி இசைக்கலையினை கற்பதற்கு பெற்றோர் ஊக்கமளித்துள்ளனர். டொரோண்டோவில் பல நிகழ்வுகளில் பங்குபற்றி பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்று ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்துவந்த சின்மயி தற்போது விஜய் டீவி (Vijay tv) இல் நடைபெறும் சூப்பர் சிங்கர் போட்டியில்
(super singer junior season 6 ) பங்குபற்றி வருகிறார்.

கடந்தவாரம் நடைபெற்ற டாப் 5 cரவுண்டில் பத்மஸ்ரீ எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களது பாராட்டுகளையும் Top 5 Super Singer விருதினையும் பெற்றார். கனடியப் பாடகி சின்மயி இந்த போட்டியில் வெற்றிபெற்று அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இறுதி போட்டிக்கு இவர் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comment here