மலைநாடுவிளையாட்டு

உள்ளூர் கழகங்களை ஊக்குவிக்க கரப்பந்தாட்டப் போட்டி

எந்தவொரு போட்டி என்றாலும் வெளிப்பிரதேச வீரர்களையோ அல்லது பெரிய பெரிய வீரர்களை ரசிக்கும் நாம் எம் உள்ளூர் கழக வீரர்களை மறந்து விடுகின்றோம்.அவர்களின் திறமையும் மறைக்கப்பட்டு விடுகின்றன. இந்நிலையில், உள்ளூர் கழகங்களை ஊக்குவிக்கும் முகமாகவும் உள்ளூர் விளையாட்டு வீரர்களை இனங்கண்டுகொள்ளும் முகமாகவும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொத்மலை பிரதேசபை உறுப்பினர் பாரதிராஜா தலைமையில் இடம்பெற்ற இப்போட்டி பகலிரவு போட்டியாக இரு இடங்களில் இடம்பெற்றது. அந்தவரிசையில் பழையத்தோட்ட கரப்பந்தாட்ட போட்டி நிறைவுப்பெற்றுள்ளது. இதில் முதலிடத்தை வெற்றி விளையாட்டு கழகமும், இரண்டாம் இடத்தை சீன் கீழ்ப்பிரிவு எவரஸ்ட் விளையாட்டு கழகமும் மூன்றாம் இடத்தினை சீன் மேல்பிரிவு 7UP விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டன.

இந்நிகழ்வில் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் பாரதிராஜா உட்பட உள்ளூர் விளையாட்டு வீரர்கள் தோட்ட பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தகவல்:நீலமேகம் பிரசாந்த்

Comment here