கட்டுரைமலைநாடு

மலையக மக்களுக்காக போராடிய வெள்ளக்காரதுறை பிரேஸ்கேடில்!!- வீ.எஸ்.வின்மணி!

தொழிலாளர்களின் உரிமைகளை மதித்து ஜனநாயக முகாமைத்துவத்தை நடத்த துரைமாரும் பெருந்தோட்டப்பகுதிகளில் பணிபுரிந்துள்ளனர் என்பதையும் மறந்துவிட முடியாது. இவ்வாறு மனிதநேயம்மிக்க தோட்டதுரையொருவாரன இங்கிலாந்தில் பிறந்த மார்க் என்டனி லிஸ்டா பிரேஸ்கேடில், இவர் மார்க்சியக் கொள்கைகளில ; ஈடுபாடு கொண்டு புரட்சியாளராக விளங்கினார். இவரது துணிச்சல் மிக்க தொழிற்சங்க வாழ்க்கை வரலாற்றை இன்றைய மலையக தொழிற்சங்கள் முன்மாதிரியாக எடுத்து செயற்பட்டால் மலையக மக்களின் பிரச்சினைக்கு விடிவு கிடைக்கும்.

போராடிய பிரேஸ்கேடில்
வெள்ளையர் ஆட்சிகாலத்தில் இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட துரைமாரே ‘பிக்பொஸ்’ஸாக பார்க்கப் பட்டவர். அவர்களின் பார்வையிலிருந்து தொழிலாளர்கள் ஓடவும் முடியாது,ஒளிய வவும் முடியாது. வேலைநேரத்தில் உன் னிப்பாக கண்காணிக்கப்படுவார்கள். அது மட்டுமல்ல பெரும்பாலான துரைமார்கள் நிர்வாகத்துக்கு விசுவாசமானவர்களாகவே வலம் வந்தனர். இதனால், தொழிலாளர்களின் வழிகளுக்கு-அடக்கி ஆள்பவர்களாகவே துரைமார் தென்பட்ட னர்.

இந்த பார்வை சரிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்கள் மலையகத்தில் நடந்தேறியுமுள்ளன. ஆனால், தமது கடமையை உரிமை வகையில் செய்து தொழிலாளர்களின் உரிமைகளையும் மதித்து ஜனநாயக முகாமைத்துவத்தை நடத்திய துரை மாரும் பெருந்தோட்டப் பகுதிகளில் பணி புரிந்துள்ளனர் என்பதையும் மறந்துவிட முடியாது. இவ்வாறு மனிதநேயம்மிக்க தோட்டதுரையொருவரின் வாழ்க்கை வரலாறு.

1912 செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி இங்கிலாந்தில் பிறந்த மார்க் என்டனி லிஸ்டா பிரேஸ்கேடில், மார்க்சியக் கொள் கைகளில் ஈடுபாடுகொண்டு புரட்சியாள ராக விளங்கினார். தோட்டத்துரை ஆவ தற்காக இலங்கை வந்து வேலை பயின்று கொண்டிருந்த காலத்திலேயே-தோட்டத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு பொங்கி எழுந் தார், போராடினார். அப்போராட்டமானது இலங்கை சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உத்வேகம் சேர்த்தது. உரிமைகளுக்காக குரல் எழுப்பும் துணிச்சலானது பிரேஸ்கேடிலின் இரத்தத் திலேயே உறுயிருந்தது.

அவரின் தாயர் கூட, இங்கிலாந்தில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டு மெனக்கோரி அறவழியில் சமராடி வந்த அமைப்பைச் சார்ந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தவர். அது மட்டுமல்ல, 1925 இல் இலண்டன் ஹொல்போர்ன் தன்னாட் சிச் சபைக ; கு தொழிற் கட்சியின் சார்பில் தேர்தலிலும் களமிறங்கினார். இலங்கை வருகை 1927 இல் பிரேஸ்கேடிலுக்கு 15 வயதா கும் போது அவருடைய அன்னை அவரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்று கலைத்துறையில் கல்விபயில வைத்தார்.

ஆஸ்திரேலிய பொதுவுடமைக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந் தார். பண்ணைகளில் பணிபுரிந்தார். மார்க்சிய அரசியல் சித்தாந்தங்களைக் கற்றறிந்தார். அக்காலகட்டத்தில் ஆஸ்தி ரேலியா பூர்வீக மனிதர்களின் வாழ்க்கை முறையை அவதானித்து அதன் நுட்பங் களைக் கற்றுக்கொண்டார். 1936 இல் ஒரு தோட்ட அதிகாரியாகும் நோக்கில் தனது 25 ஆவது வயதில் இலங்கை வந்தடைந்தார். மத்திய மாகாணத்தில்; – கண்டி, மடுல் கலை ரெலுக்காஸ் தோட்டத்தில்தான் இவர் பயிற்சிகளை ஆரம்பித்தார். அக் காலகட்டத்தில் எச்.டி. தோமஸ் என்பவரே குறித்த தோட்டத்தில் அதிகாரியாகப் பணி புரிந்து வந்தார்.

சமூகப் பிரக்ஞையும், மார்க்கஸிய அறிவும் கொண்டிருந்த பிரேஸ்கேடில் பயிலுனராக இணைந்து மிக்குறுகிய காலத்துக்குள்ளேயே தோட்டத் தொழிலாளர்கள், மனிதாபிமானமற்ற கொடூரமான முறையில் நடத்தப்படு வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பிறகு தொழிலாளர்களுக்காக குரல் எழுப்புவதற்கும் துணிந்தார்.
அரசியல் செயற்பாடுகள் அக்காலகட்டத்தில் காவல்துறை தலைமை அதிகாரியாக இருந்த மிக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருந்த ஹேபர்ட் டௌபிக்கின் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு மகிழ்ச்சி தெரிவிப்பதற் கான ஒரு கூட்டத்தை இலங்கை சம சமாஜக் கட்சி 1937 ஜனவரி 10 ஆம் திகதி கொழும்பில் நடத்தியது.

இக்கூட்டத் தின் அமைப்பு வேலைகளில் பிரேஸ் கேடில் தீவிரமாகப் பங்கேற்றார். இந்திய காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த திருமதி கமலாதேவி சட்டோ பாக்யாய இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவர் தலைமையில் 1937 ஏப்ரல் 3 ஆம் திகதி நாவலப ; பிட்டியவில் விசேட கூட்டமொன்றும் நடை பெற்றது. இதில் பிரேஸ்கேடில் பேசினார். ஏறக்குறைய 2 ஆயிரம்பேர் வரை திரண் டிருந்த மேற்படி கூட்டத்தில் அவருடைய பேச்சு பெரும ; வரவேற்பை பெற்றது. அவர் உரையாற்றுகையில் தொழிலாளர் கள், ‘சாமி..சாமி’ எ;ன்று உரத்துக் குரலெழுப்பினர். பிரேஸ்கேடிலுக்கும் அவருடைய மேலதி காரியான தோமஸ்க்குமிடையே அடிக்கடி முறுகல் ஏற்பட்டது. தங்களில் ஒருவரே இவ்வாறு தோட்டத் தொழிலாளர்கள் சார்பாகவும், ஆங்கில அரசுக்கு எதிராக வும் செயற்படுவதானது தோமஸ்க்கும், ஏனைய தோட்டத்துறைமாருக்கும் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

தோட் டத்தி லிருந்து வெளியேற்றி அவரை எப்படியா வது ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற முடிவுக்கும் வந்தனர். இதன்படி தோட்டத்திலிருந்து அவர் விலக் கப்பட்டார். ஆனால், துரைமார் போட்ட கணக்குபடி அவர் ஆஸ்திரேலியா செல்ல வில்லை. மாறாக இலங்கையி லேயே தங்கியிருந்த சமசமாஜக்கட்சியுடன் இணைந்து வெள்ளை அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடினார். நாடு கடத்தல் உத்தரவு இதற்கிடையில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின்படி ஆளுநர் சர் ரெஜி னோல்ட் ஸ்டப்ளினால் கையொப்பமிடப் பட்டு, 1937 ஏப்ரல் 24 ஆம் திகதி மாலை 6 மணிக்குள் நாட்டைவிட்டு வெளிறே வேண்டும் என்ற உத்தரவு பிரேஸ்கேலிடம் கையளிக்கப்பட்டது. 1896 ஆம் ஆண்டு சட்டசபையில் நிறைவேற்றப் பட்டிருந்த சட்டத்தின் பிரகாரமே இந்நட வடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி உத்தரவுக்கு சவால் விடுத்த பிரேஸ்கேடில் பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தலைமறை வானார். 24 ஆம் திகதி சனிககிழமை ஐந்து மணிக்கு ‘மூல்ட்டன்’ எனும் கப்பல் – கொழும்புத் துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி புறப்படவிருந்தது. இக்கப்பலில் பிரேஸ்கேடில் புறப்படுவாரென எதிர்ப் பார்த்து மக்கள் கூட்டம் அங்கே திரண்டி ருந்தது. இலங்கை சமசமாஜக்கட்சியின் தலைவர்களான எம்.எம். பெரேரா மற் றும் லெஸ்லி குணவர்தன ஆகியோரும் வந்திருந்தனர். ஆனால், பிரேஸ் கேடில் வரவில்லை. “ எங்கே பிரேஸ் கேடில்?” என்ற கேள்வி நாட்டின் பட்டி தொட்டி யெல்லாம் எதிரொலிக்க ஆரம்பித்தது.

பிரேஸ் கேடிலை நாடு கடத்தும் உத்தர வுக்கு எதிராக சமமாஜக் கட்சி நாடு தழுவிய மாபெரும் மக்கள் இயக்கத்தை முன்னெடுத்தது. ரெலுகாஸ் தோட்டத்தை விட்டு வெளியேறிய பின் பிரேஸ்கேடில் இலங்கை சமசமாஜக் கட்சியுடன் முழு மையாக தன்னை இணைத்துக் கொண்டார். அக்கட்சியின் செயற்குழு உறுப் பினராகவும் தெரிவானார். இவ்வாறு இலங்கையில் ட்ரொஷ்கிய வாதக் கட்சி யுடன் தன்னை இணைத்துக் கொண்டு ஆரம்பத்தில் ஒரு ஸ்டெலின் வாதியா கவே அவர் இருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமறைவு வாழ்விலிருந்து வெளிபட்டார் ஏப்ரல் 23 ஆம் திகதி முதல் தலை மறைவு வாழக்கையை மேற்கொண்டி ருந்த பிரேஸ்கேடில், 1937 மே மாதம் ஐந்தாம் திகதி சமசமாஜக் கட்சி தோழர் களின் உதவியுடன் காலிமுகத் திடலில் தோன்றினார். அங்கு அலை கடலெனத் திரண்டிருந்த சுமார் 50 ஆயிரம் வரையி லான மக்கள் கூட்டத்தி னுள் புகுந்து சென்று மேடையில் காட்சியளித்தார். கூட்டத்தில் இடியென முழங்கிய பிரேஸ் கேடிலை கைது செய்வது குறித்து பொலி ஸாரால் நினைத்துபார்க்ககூட முடிய வில்லை. மகத்தான மக்கள் சக்திக்கு அவர்கள் அடிபணிந்தனர்.

ஆனால், இரண்டு நாடகளின் பின்னர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாகவிருந்த நாட்களில் அவர் மறைந்திருந்த இடங்கள், மேற் கொண்ட பயணங்கள், சமசமாஜக் கட்சி தோழர்களின் துணிகர நடவடிக் கைகள் ஆகியன சுவையும் விறுவிறுப்பும் கொண்டவை. பிரேஸ்கேடில் கைதுசெய்யப்பட்டமை மற்றும் நாடு கத்த உத்தரவிடப்பட்டமை தொடர்பான வழக்கு நீதியரசர் சிட்னி ஆபிரகாரம் முன்னிலையில் 1937ஆம் ஆண் டு மேமாதம் 18 ஆம் திகதி நடத்தப் பட்டது. அவசரகால சூழ்நிலைகளில்லாத ஒரு காலக்டத்தில் 1896 இல் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தைப் பயன் படுத்தி நாடு கடத்த உத்தரவிட்டமை பெருத்த மற்றதெனவும், மனித கருத்து சுதந்திரத் தைப்பாதுப்பதும் ஆகுமென தீர்ப்பளிக்கப் பட்டது. இதை யடுத்து பிரேஸ்கேடில் சுதந்திர மனிதரானார்.

ஆங்கிலேய அரசை அசைத்துவைத்தார் பிரேஸ்கேடில் தனது போராட்டத்தின்மூலம் அன்றைய ஆளுநர் சர் எட்வட் ஸ்டப்ஸ், முதன்மைச் செயலாளர் சர் மெக்ஸ்வெல் வெடர் போன், அவைத் தலைவர் சர் டொன் பாரோன் ஜயதிலக்க, பிரதி அவைத்தலைவர் டி.எஸ். சேனாநாயக்க, பிரதி பொலிஸ்மா அதிபர் பி.என். பேங்ஸ், காலவித்துவ அலுவலகத்தைச் சேர்ந்த சி.ஆர். கோவெல் ஆகியோரை சவாலுக்குட்படுத்தினார். அதன் பின் சிறிதுகாலத்தில் அவன் தன்சொந்த விரும்பத்தின்போரில் இங்கிலாந்து திரும்பிச்சென்றார். 1939 இல் மேரி எலிஸபெத் வின்டன் என்ற பெண்மணியை அவர் திருமணம் முடித்தார். தொழிற்கட்சியின் தீவிர உறுப்பினராக இருந் தார். 1999 ஆம் ஆண்டு ஜூன் 22 இல் அவர் காலமானார். அவரு டைய போராட்டங்களின் தாக்கம் பல பத்தண்ணடுகள் வரை இலங்கையில் நீடித்தது. அச்சுவடுகள் இன்னும் அழியாதிருக்கின்றன.

Comment here