விளையாட்டு

சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்கள் தடை

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 2.4.6 மற்றும் 2.4.7 ஆகிய சரத்துக்களை மீறியதாக சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழல் எதிர்ப்பு குழுவின் முன்னிலையில் சனத் ஜயசூரிய ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு கிரிக்கட் நடவடிக்கைகளில் ஈடுபட சர்வதேச கிரிக்கட் சபை தடை விதித்துள்ளது.

ஊழல் விசாரணைகளுக்கு ஆதரவு வழங்காமை, சாட்சிகளை வழங்காமை, அந்த விசாரணைகளுக்காக முன்னிலையாகாமை, தடை ஏற்படுத்தியமை மற்றும் குறித்த ஆவணங்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளே அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comment here