மலைநாடுவிளையாட்டு

இனிதாக நிறைவுபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி

கொத்மலை வலயத்திற்குட்பட்ட பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி போட்டிகள் நேற்று இடம் பெற்றன.

வள்ளுவர்,பாரதி,கந்தசாமி இல்லங்கள் கடந்த ஒருமாத காலமாக முட்டி மோதிக்கொண்டு வந்தன.மாணவர்களும்,ஆசிரியர்களும் தத்தமது இல்லங்களை முதன்மை பெற கஸ்டப்பட்டனர்.பல போராட்டங்கள்,சோதனைகள்,என்பவற்றை கடந்து பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தின் 2019ம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியில் பாரதி இல்லம்(பச்சை) 715 புள்ளிகளுடன் முதலிடத்தையும் ,கந்தசாமி இல்லம் (சிவப்பு) 697 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும்,வள்ளுவர் இல்லம் 657 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

அதுமட்டுமல்லாமல் இறுதி தினமான நேற்று பழைய மாணவர்களுக்கான ஓட்டப்போட்டி,பெற்றோர்களுக்கான ஓட்டப்போட்டி,ஆசிரியர்களுக்கான ஓட்டப்போட்டி,நடுவர்களுக்கான ஓட்டப்போட்டி என அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டன.மேலும் வினோத உடை அனைவரையும் சிந்திக்கவும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியது.மேலும் அமைக்கப்பட்ட இல்லங்களும் வியப்பை ஏற்படுத்தும் வண்ணம் பாரதி இல்லம் ஈபில் கோபுரத்தையும்,கந்தசாமி இல்லம் போர் பீரங்கியையும், வள்ளுவர் இல்லம் விண்வெளி ராக்கெட்டையும் வடிவமைத்து கண்களை குளிர்ச்சி படுத்தியது. இவ்வாறு பல சுவாரஸ்யங்களோடு சிறப்பாக நிறைவு பெற்றது பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தின் 2019க்கான இல்ல விளையாட்டுப் போட்டி.

தகவல்: நீலமேகம் பிரசாந்த்

Comment here