சினிமா

முதலிடம் பிடித்த சர்கார்! ஹாலிவுட் படமே அப்பறந்தான் – லிஸ்ட் இதோ

விஜய் படங்கள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் அண்மையில் வந்த சர்கார் படமும் அந்த லிஸ்டில் இடம் பிடிக்க தவறவில்லை.

படம் ரூ 250 கோடிகளை தாண்டி வசூல் செய்தது என சொல்லப்பட்டாலும் விநியோகஸ்தர் தரப்பில் 25 % நஷ்டம் என அண்மையில் ராஜன் என்பவர் கூறினார்.

ஆனால் தியேட்டர்களை பொறுத்தவரை இப்படம் நல்ல வசூல் தான் என சொல்கிறார்கள். அந்த வகையில் கோபிச்செட்டிபாளையம் ஜெயமாருதி சினிமாஸ் இவ்வருடம் அவர்களுக்கு அதிகம் வசூல் கொடுத்த படங்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளது.

இதில் சர்கார் முதலிடத்திலும், 2.0 மூன்றாம் இடத்திலும், ஹாலிவுட் படமான ஜுராசிக் பார்க் 8 ம் இடத்திலும் இருக்கின்றது.

Comment here