சினிமா

சர்கார் பட மாஸை பின்னுக்கு தள்ளி இடம் பிடிக்கும் விஸ்வாசம்!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போல அஜித், விஜய். இவர்கள் என்றும் நல்ல நண்பர்கள் தான். அவர்களுக்குள் நட்புறவு எப்போதும் இருக்கிறது.

ஆனால் இருவரின் படங்களும் ஒப்பிட்டு பேசப்படுவது வழக்கம். அந்த வகையில் அவரது ரசிகர்கள் நானா நீயா என்பது போன்ற போட்டிகளில் சமூகவலைதளங்களில் இறங்கியுள்ளார்கள்.

அதே வேளையில் தற்போது போட்டி போட்டு அதிக அடி உயரத்தில் கட்டவுட் வைக்கிறார்கள். தீபாவளிக்கு வந்த சர்கார் படத்திற்காக 175 அடிக்கு கட்டவுட் வைத்தார்கள்.

இந்நிலையில் விஸ்வாசம் படத்திற்காக 200 அடியில் திருசெந்தூரில் அஜித் ரசிகர்கள் கட்டவுட் வைக்கிறார்களாம். இதற்கான பணிகள் தொடங்கியது. மேலும் 180 அடி உயரத்தில் வைக்கப்பட்ட தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் கட்டவுட்டை விட நீண்டது என சொல்லலாம்.

Comment here