மலைநாடு

பாமஸ்டன் ரட்னகிரி பாதையை புனரமைக்க நடப்பட்டது அடிக்கல்

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்தின் 450,000 ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாமஸ்டன் ரட்னகிரி பாதைக்கான அடிகல் நடப்பட்டது.

இந்நிகழ்வின் போது கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் கெசுன்ராஜ் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இ.தொ.காவின் தலைவரும் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்மான ஆறுமுகன் தொன்டமானின் ஆலோசனைக்கு அமைவாக இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comment here