மலைநாடு

கந்தப்பளை நகரில் அதிரடி அபிவிருத்தித் திட்டங்கள் ; வேலு யோகராஜ் நடவடிக்கை

வாகனங்களின் அதிகரிப்பு உட்சபட்சமாக காணப்படுவத்தால் நகரங்களில் நடந்து செல்வது கூட பெரும் போராட்டமாகவே காணப்படுகின்றது உள்ளது. அந்தளவிற்கு வாகன நெரிசல்.

அவ்வாறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கும் நகரமே நுவரெலியா நகரம். சுற்றுலாப் பயணிகளின் ஆதிக்கம் என்பவற்றால் வாகன நெரிசல் அதிகமாகவே காணப்படுகின்றது. இதில் கந்தப்பளை நகரமும் இவ் அசௌகரியத்திற்கு சமீபகாலமாக முகங்கொடுத்து வருகின்றது. வாகனம் நிறுத்தக்கூட இடம் இல்லாமல் கந்தப்பளை வாகன சாரதிகள் கஷ்டங்களை வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் நிலத்துக்கடியில் செல்லும் சாக்கடை நீர் பாதையும் அடிக்கடி அடைச்சலுக்கு உள்ளாகுகின்றது. இதனால் சாக்கடை நீர் கந்தப்பளை நகரில் வடிந்து செல்வதோடு மழைகாலத்தில் இந்நிலைமை மேசமாகவுள்ளது.

இந்நிலைமை தொடர்பில் நுவரெலியா பிரதேசசபை உறுப்பினர் வேலு யோகராஜின் கவனத்திற்கு கொண்டு சென்றதுக்கமைய நேற்று பாதை அபிவிருத்தி அதிகார சபை பொறியலாளர்களுடன் கந்தப்பளை நகரை மிக விரைவில் அகலப்படுத்தவும்,வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பதற்கும், சாக்கடை பாதை சீரமைக்கவும் அபிவிருத்தி பணிகள் விரைவாக மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தகவல்:நீலமேகம் பிரசாந்த்

Comment here