விளையாட்டு

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் பலப்பரீட்சை

ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் நாளைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகிறது.

ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் 6 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. கடந்த 20-ஆம் திகதியுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிவடைந்தது.

இதன் முடிவில் ‘ஏ’பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுத பெற்றன. இலங்கை, ஆங்காங் அணிகள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.

சூப்பர் 4 சுற்று நேற்று தொடங்கியது. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

‘சூப்பர் 4’ சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தியது.

ஏற்கனவே நடந்த ‘லீக்‘ ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி இருந்தது. இதனால் நாளை மீண்டும் தோற்கடிக்க இயலும் என்ற நம்பிக்கையில் இந்தியா உள்ளது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் இந்திய அணி உள்ளது. பேட்டிங்கில் தலைவர் ரோகித் சர்மா (158), தவான் (213 ரன்), அம்பதிராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி நல்ல நிலையில் உள்ளனர்.

பந்து வீச்சில் புவனேஷ் வர்குமார் (6 விக்கெட்), பும்ரா (5 விக்கெட்), ஜடேஜா (4 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.

இரு அணிகளும் நாளை மோதுவது 131-ஆவது போட்டியாகும். இதுவரை நடந்த 130 போட்டிகளில் இந்தியா 53-லும் , பாகிஸ்தான் 73-லும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டம் முடிவு இல்லை.

Comment here