மலைநாடு

என்பீல்ட் பார்க்கன்டல் தோட்டத்தில் 50 வீடுகளுக்கு அடிக்கல்

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சால் என்பீல்ட் பார்க்கன்டல் தோட்டத்தில் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம், இந்திய அரசாங்கத்தின் கண்டி உதவி உயர்ஸ்தாணிகர் திதேந்திர சிங், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். ராம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயலாளர் பிலீப் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Comment here