ஆசிரியர் தலையங்கம்உள்நாடு

இலங்கை – சீனா உறவில் புதிய திருப்பம் ; அமெரிக்கா அதிர்ச்சி

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் நெருக்கமடையும் உறவால் அமெரிக்கா அதிருப்பதி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு நாடுகளின் உறவினால் அமெரிக்க அரசாங்கம் கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளதாக இராஜதந்திர தகவல் வட்டாரங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கமைய அமெரிக்கா அரசாங்கம் தமது நட்பு நாடுகளின் உதவியுடன் சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான தொடர்பினை துண்டிக்க விசேட செயற்பாடு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு அழுத்தம் பிரயோகிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பாதுகாப்பு வரவு செலவு திட்டம் மூலம் இலங்கைக்கு அருகில் உள்ள கடல் எல்லை தொடர்பில் அதிக பணம் செலவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீனாவினால் எற்பட கூடிய அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுப்பதற்காக இதற்கு முந்தைய வருடங்களை விடவும் அதிகம் பணம் இம்முறை ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க பென்டகனினால் வெளியிடப்பட்ட வருடாந்த அறிக்கையில் இலங்கை – சீனா உறவு குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

சீனா, இலங்கையில் மேற்கொள்ளும் முதலீடு மற்றும் பொருளாதார நடவடிக்கை தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடத்திற்கு சீனா பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பில் அறிக்கையில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம், இலங்கையின் பொருளாதார நடவடிக்கை தொடர்பில் பிரயோகிக்கப்படும் அழுத்தம் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக வெள்ளை மாளிகை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேளை கடந்த 20ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தந்த ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இத்சுநொரி ஒனொதெரா, இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் விசேட பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அலரி மாளிகையில் கலந்துரையாடியுள்ளார்..

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தனது உத்தியோகபூர்வ சுற்றுப் பயணித்திற்கு இடையில் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அவர் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டவர், சீனா தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடன் அவதானத்திற்குட்படுத்தியதாக குறிப்பிட்டார்.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரின் உத்தியோகபூர்வ விஜயத்திற்கு இடையில் ஜப்பான் போர் கப்பல் மற்றும் அமெரிக்க கடற்படையினருக்கு சொந்தமான போர் கப்பல் ஒன்றும் கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை துறைமுகத்திற்கு வருகைத்தந்தது. இந்த விடயம் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் போர் நிலைமை ஏற்படுவதற்கான ஆரம்பமாக இருக்கலாம் என சர்வதேச பாதுகாப்பு வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

The United States has been reported to have worsened the relationship between Sri Lanka and China.

This information is based on diplomatic information sources that the US government has been strained by the relationship between the two countries.

Comment here