ஆசிரியர் தலையங்கம்உள்நாடு

ஆஸியின் புதிய பிரதமருக்கு ரணில் வாழ்த்து

ஆஸ்திரேலியாவின் 30 ஆவது பிரதமராக பதவியேற்ற ஸ்கொட் மொரிசனிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா பிரதமர் மல்கம் டேர்ண்புல், வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து விலக்கப்பட்டதை அடுத்து, கட்சியின் தலைமைத்துவம் நடத்திய வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற நிலையில் மொரிசன் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

அவருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததகவது,

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் சிறந்த நட்பு காரணமாக இரு நாடுகளுக்கிடையில் சிறந்த ஒத்துழைப்பு காணப்படுகின்றது.

இவ்வாறு இரு நாடுகளின் நெருக்கமான ஒத்துழைப்பு பற்றி மோரிசன் தனிப்பட்ட முறையில் அறிவார். எனவே இரு நாடுகளும் பரஸ்பர நலன்களை பெற்றுக்கொள்ள இது சிறந்த சந்தர்ப்பமாகும் என குறிப்பிட்டார்.

மேலும் முன்னாள் குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, மொரிசன் இலங்கைக்கு விஜயம் செய்ததை நினைவு படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Prime Minister Ranil Wickremesinghe congratulated Scott Morrison on the post of Australia’s 30th Prime Minister.

Comment here