ஆசிரியர் தலையங்கம்உள்நாடு

இந்துசமுத்திர பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் வியட்நாம் விஜயம்

இந்து சமுத்திர பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அவர் இன்று (சனிக்கிழமை) வியட்நாமிற்கு விஜயம் செய்துள்ளார்.

குறித்த மாநாடு எதிர்வரும் 27 மற்றும் 28 ஆகிய இரு நாட்கள் இடம்பெறவுள்ளதுடன் இதில் பல நாட்டு தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் ஏனைய நாட்டு அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் எனவும் கூறப்படுகின்றது. மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மற்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பால கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Prime Minister Ranil Wickremesinghe has made a visit to Vietnam to attend the Indian Ocean Conference.

Comment here