ஆசிரியர் தலையங்கம்மலைநாடு

2000 ரூபா உதவித்தொகையை பெற்றுக்கொள்வதில் முதியோர்கள் பெரும் சிரமம் ; தீர்வு அவசியம் என்கிறார் ; மு.இராமச்சந்திரன்

அரசாங்கத்தினூடாக முதியோருக்கு கிடைக்கும் 2000 ரூபா உதவித்தொகை பணத்தை அவர்கள் இலகுவாக பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் வகையில் பிரதேச கிராம சேவகர் காரியாலங்களிலோ அல்லது தோட்டக் காரியாலயங்களிலோ அல்லது உப தபாலக கட்டடங்ளை மீண்டும் இயங்கச் செய்து அங்கு உதவுத்தொகையை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் அம்பகமுவ பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து இதற்கான பதிலை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நோர்வூட் பிரதேச சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

தான் பெற்றெடுத்த பிள்ளை முதன் முதலாக நடை பயில்வதையும் முதல் முதலாக மழலை மொழியில் பேசுவதையும் தனது பிள்ளையின் வளர்ச்சியில் பொறாமை கொள்ளாதா ஒரே உறவு பெற்றோர்களே.

ஆனால், பெற்றோர்கள் தம்மால் உழைத்து வாழ முடியாத தமது பிள்ளைகளை நம்பி வாழும் அந்திம காலத்தில் அப்பெற்றோரை அதே காலால் எட்டி உதைத்து அதே வாயால் தகாத வார்த்தைகளால் தூற்றும் பிள்ளைகள் இருக்கத்தான் செய்கின்றார்.

இவ்வாறான நிலையில் 70 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு வழங்கப்பட்டுவந்த 2000ரூபா மாதாந்த கொடுப்பனவு கடந்த கால ஆட்சியில் கிராமங்களுக்கு மட்டுமே சென்றடைந்ததோடு நல்லாட்சி அரசாங்கம் அமைந்ததன் பின் பெருந்தோட்ட வாழ் முதியோர்களுக்கும் கிடைத்தது . 70 வயதிற்கும் மேற்பட்டோர் எனப்படுவோர் நோயாளர்களாகவும் நடமாட முடியதவர்களுமாகவே அதிகம் காணப்படுகின்றனர். இவ்வாறனவர்களுக்கு மருத்துவச் செலவுகளுக்கும், போக்குவரத்து மற்றும் இதர செலவுகளுக்கும் 2000 ரூபா உதவித்தொகை பெரும் உதவியாகவிருக்கின்றது.

எனினும் அவர்களுக்கான உதவித்தொகையை மாதாந்தம் முறையாக பொற்றுக்கொள்வதில் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளிலுள்ள முதியோர்களுக்கான மாதாந்த உதவுத்தொகை தபாலகங்கங்களிலிருந்து மீண்டும் அம்பகமுவ பிரதேச செயலகங்களுக்கு திரும்பிச் செல்கின்றது.

இத்தொகை மாதந்தம் 5 இலட்சம் தொடக்கம் 6 இலட்சம் வரையானது என அறிய முடிகின்றது. அவ்வாறாயின் மாதாந்தம் 250 தொடக்கம் 300 பேர் வரையில் 2000 ரூபா உதவுத்தொகையை பெற்றுக்கொள்ளாமல் போகின்ற நிலைமை ஏற்படுகின்றது. இதில் பெரிதும் கஷ்ட பிரதேசத்தில் வாழும் பெருந்தோட்ட முதியோர்களே இவ்வாறு தனது உதவித்தொகை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர்.

உதாரணமாக லெதண்டி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தோட்டங்களான டங்கள் மேற்பிரிவு புரடொக், மிட்போட் ,நோட்டன் ஆகிய தோட்டப்பகுதிகளில் உள்ள முதியோர்கள், பல கிலோ மிட்டர் தூரம் நடந்து வந்து அல்லது முச்சக்கரவண்டிக்கு வாடகை செலுத்தியே 2000 ரூபா உதவுத்தொகையை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

கடும் சிரமத்திற்கு மத்தியிலேயே அட்டன் ,டிக்கோயா தபாலகங்களில் நீண்ட வரிசையில்காத்து நின்றும் இத்தொகை பணத்தை பெற்றுக்கொள்ளவதில் பெரும் அவலத்தை எதிர்நோக்குகின்றனர்.

ஆகவே, அரசாங்கத்தினூடாக இவர்களுக்கு கிடைக்கும் 2000 ரூபா உதவுத்தொகை பணத்தை இலகுவாக பெற்றுக்கொள்ள வழி வகை செய்யும் வகையில் பிரதேச கிராம சேவகர் காரியாலங்களிலோ தோட்ட காரியாலயங்களிலோ அல்லது உப தபாலக கட்டிடங்ளை மீண்டும் இயங்கச் செய்து அங்கு முதியோர்களுக்கான உதவுத்தொகையை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் , இந்த பிரேரணையை எதிர்வரும் அம்பகமுவ பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்து இதற்கான பதிலை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Elderly difficulties in getting a 2000 rupee allowance; The solution is necessary; Norwood Pradeshiya Sabha Member Ramaccantiran

Comment here