மலைநாடு

1000 ரூபா சம்பள உயர்வை அமைச்சர் திகாவே தடுத்தார் : அப்பட்டமான காட்டிக்கொடுப்பென டிலான் குற்றச்சாட்டு

1000 ரூபா சம்பள உயர்வு அமைச்சர் திகாம்பரத்தின் அப்பட்டமான காட்டிக்கொடுப்பு காரணமாகவே தோட்டத்தொழிலாளர்களுக்கு கடந்தமுறை கிடைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பேர் அணி உறுப்பினரான டிலான் பெரேரா.

கூட்டுஅரசாங்கத்திலிருந்து விலகியுள்ள சுதந்திரக்கட்சி உறுப்பினர்களால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் புஞ்சிபொரளையிலுள்ள சுதந்திர ஊடக நிலையத்தில் நடைபெற்றது.

இதன்போது, பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“ தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு அவசியம் என்பதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுதியாக நின்றது. அத்தொழிற்சங்கத்துக்கு பலமும் இருக்கின்றது. எனினும், இடையில் புகுந்து திகாம்பரமே அனைத்தையும் குழப்பினார்.

இவ்வாறு குழப்பியடித்தவர் இன்று அமைச்சுப் பதவியை துறக்கபோவதாக புலம்புவது வெட்கக்கேடாகும்” என்றும் டிலான் கடுமையாக விமர்சித்தார்.

Comment here